எல்லோருக்கும் அன்பின் வணக்கம்.
எங்கள் பள்ளியில் எத்தனையோ விழாக்கள் .
சுதந்திர தின விழா
குடியரசு தின விழா
குழந்தைகள் தின விழா
ஆசியர் தின விழா
ஆண்டுவிழா ...........................எனப் பலப்பல.
இவற்றுள் எனக்குப் பிடித்த விழா -
குழந்தைகள் தின விழா- நவம்பர்-15
அன்று பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களை அடிப்பதே கிடையாது.
வழக்கமான சீருடைகளை விடுத்து; வண்ண வண்ண உடைகளை அணியலாம்.
பள்ளியில் எங்களுக்காக அன்று இனிப்பும் வழங்குவார்கள்.
வகுப்பே நடக்காது;அதுதான் பெரிய சிறப்பு;
அதனால் மறுநாளைக்கு வீட்டுப்பாடமும் கிடையாது.
வீட்டிற்குப் போன பின்னரும் விளையாடலாம்;
அம்மாவோடு கதை பேசி மகிழலாம்.
அக்கா/ அண்ணன்/ தம்பி/ தங்கையோடு பொழுது போக்கலாம்.
மொத்தத்தில் குழந்தைகளாகிய நாங்கள் அனைவரும்;
எந்த ஒரு மனக்குறையும் இல்லாமல் நிறைவுடன்
தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை ரசிக்கலாம்.
எல்லா மாணவருக்கும் சேர்த்து ஒரு கூட்டம் நடக்கும்.
கூட்டத்தில் பாட்டு, நடனம், நாடகம் என முழுக்க முழுக்க கொண்டாட்டம் தான்.
நாங்கள் ஆடுவோம்; பாடுவோம்; நாடகங்கள் நடிப்போம்;
மாறுவேடமும் போட்டு மகிழ்வோம்.
இந்தக் கலை நிகழ்ச்சிக்காக பத்து நாட்களுக்கு முன்னரே ஒத்திகை, பயிற்சி எனத்
தடபுடலாக நேரம் போகும்.
இத்தனை இன்பத்தை அள்ளித் தரும் குழந்தைகள் தின விழாவை;
நிரந்தரமாக ஏற்பாடு செய்து கொடுத்த நேரு மாமாவை;
இப்போது மிகுந்த மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
ஆம்;
அவரது பிறந்தநாள் தானே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வெள்ளைக் கோட்டும் சூட்டும் அணிந்து;
மார்பில் ஒற்றை ரோஜாவைக் குத்திக் கொண்டு;
‘பாரத ரத்னா’ என்ற பட்டத்திற்குரியவராய்;
நம் சுதந்திரத் திரு நாட்டின் முதல் பிரதமமந்திரியாய்ப் பதவியேற்ற;
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை...
நாட்டு மக்கள் எப்படிக் கொண்டாட வேண்டும் என்று;
அவரே வரையறுத்துக் கொடுத்தார்.
குழந்தைகள் மேல் அவர் கொண்ட பிரியம் தான்...
அவரை மாமா என்று அழைக்க வைத்தது.
பாரத தேசமெங்கும் உள்ள குழந்தைகளுக்கு ஒரு அடையாளமும் அங்கீகாரமும்
கிடைத்தது; ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளால் தான் எனில் மிகை ஆகாது.
அவரது பிறந்தநாளில் நாம் செய்ய வேண்டிய பணியையும் சிந்திக்க வைக்கிறது
இக்கொண்டாட்டம்.
அடிப்படைத் தேவைகளைப் பெற இயலாமல்;
படிக்க வேண்டிய வயதில் உழைக்கச் செல்லும் குழந்தைகள் எல்லோருக்கும்
சமச்சீரான கல்வியைக் கொடுக்கும் சமுதாயமாக...
நம்நாடு உருவாக நாம் துணை நிற்போம்;
ஒன்று கூடுவோம்;
மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
நன்றி
வணக்கம்.
No comments:
Post a Comment